tamilnadu

img

‘இந்தியாவில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம்’

புதுதில்லி:

இந்தியாவில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்றும் பஞ்சீல கொள்கைகளை இந்தியா, சீனாகடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்தியா விற்கான சீன தூதர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் ஆகியோர் சென்னை மாமல்ல புரத்தில் அக்டோபர்  11 அன்று சந்தித்துப் பேசுகின்றனர். இதைத்தொடர்ந்து இந்தியா விற்கான  சீனா தூதர் சன் வீடோங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அண்டை நாடுகளுக்குள்  வேறுபாடுகள் இருப்பது இயல்பு. முக்கியமானது வேறுபாடுகளை சரியாகக் கையாள்வது மற்றும் பேச்சுவார்த்தை, ஆலோசனை மூலம் தீர்வைக் காண்பது. கடந்த பல தசாப்தங்களாக, சீனா-இந்தியா எல்லைப் பகுதியில் ஒரு துப்பாக்கிச்சூடு  கூட நடை பெறவில்லை.  அமைதி பராமரிக்கப்பட்டு வருகிறது. 

சீனாவிற்கு சில இந்திய இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான கட்டணங்களை குறைத்தல், கொள்முதல் பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அனுப்புதல் மற்றும் இந்திய விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய உதவுதல் உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வு பெரும்பாலும்அவர்களின் தொழில்துறை கட்டமைப்பு களில் உள்ள வேறுபாடுகளின் விளை வாகும்.சீன நிறுவனங்களுக்கு இந்தியா மிகவும்நியாயமான, நட்பு மற்றும் வசதியான வணிகச் சூழலை வழங்கும்.இந்தியா- சீனா ஆகியவை பஞ்சீல கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவில் முதலீடுசெய்ய சீன நிறுவனங்களை சீனா ஊக்குவிக்கிறது. மேலும் சீன நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட இந்தியாமிகவும் நியாயமான, நட்பு மற்றும் வசதியான வணிகச் சூழலை வழங்கும் என்று நம்புகிறது.பிராந்திய அளவில் பேச்சுவார்த்தைகள்  மற்றும் ஆலோசனைகள் மூலம் மோதல்களை அமைதியாக தீர்க்க வேண்டும். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கூட்டாக பேணி காக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

;